25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இரண்டு விதமான தோற்றங்களில் ‘  சைரன் “படத்தில் ஜெயம் ரவி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரண்டு விதமான தோற்றங்களில் ‘ சைரன் “படத்தில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி சைரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ், மற்றும் யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் டைரக்டு செய்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டீசரில் ஜெயிலில் இருக்கும் ஜெயம் ரவி பரோலில் வெளியே வருவதுபோன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. ஜெயம் ரவியின் கைதி கதாபாத்திரத்தில் ஒரு கதையும், போலீசாக வரும் கீர்த்தி சுரேஷ் குரலில் ஒரு கதையும் என இரண்டு கதாபாத்திரங்களின் கதையை விவரிக்கும் காட்சி டீசரில் உள்ளது.

பரபரப்பான திருப்பங்களுடன் மாறுபட்ட கதைக் களத்தில் ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகி இருக்கும் இந்த டீசர், படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் ஜெயம்ரவி முதல் முறையாக 'சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் வருகிறார்.

ஆக் ஷன் திரில்லர் கதையம்சத்தில் உருவாகிறது. ஜெயம்ரவி இது வரை ஏற்றிராத இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். யோகி பாபு நகைச்சுவை மட்டுமின்றி கதையுடன் ஒன்றிய வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் திரைக்கு வர உள்ளது. இசை ஜி வி.பிரகாஷ், ஒளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News